இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்: பாதுகாப்பு செயலாளர் பணிப்பு

Published By: J.G.Stephan

01 Jul, 2021 | 10:15 AM
image

(எம்.மனோசித்ரா)
திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள்  இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த விவகாரம் , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் , எதிர்காலத்தில் இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து அவதானம் செலுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள்,  இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

திஸ்ஸமகாராம, வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள்,  இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) இலங்கையில் உள்ள சீன தூதரகத்திடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த சீன தூதரகம், குறித்த தொழிலாளர்கள், சீன  இராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் பதிலளித்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆடை சீன இராணுவத்துக்கோ அல்லது ஏதேனும் இராணுவ அமைப்புக்கோ சொந்தமானது அல்ல எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான சீன தூதரகத்தினால் குறித்த பகுதியில்  பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் பணிகளில் ஈடுபடுகின்றபோது இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23