நடிகை நயன்தாரா விரைவில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பொதுவாக எந்த விழாவிலும் பங்குபற்றாத நயன்தாரா அண்மையில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக பங்குபற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.  அத்துடன் அன்றைய விழாவில் எளிமையான உடையில் வந்து அனைவரையும் வசீகரிக்கவும் செய்திருக்கிறார். இந்த தகவல் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அவர்களும் நயன்தாரா கட்சியில் இணைந்து பணியாற்ற எந்த தடையும் இல்லை என்று சொல்லப்பட்டதாகவும், விரைவில் தமிழக முதல்வரை நயன்தாரா சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏந்கனவே நடிகை நமீதா தமிழக முதல்வரின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்