கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை இணையத்தளம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர் என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் சிறுமியை பணத்திற்காக அழைத்துச் சென்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்குடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 21 பேர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.