(செ.தேன்மொழி)

றாகம மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

றாகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போது 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 51 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 3 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது , கந்தானை பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவரிடம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும் , மற்றைய நபரிடமிருந்து 2 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேமித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் , சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.