அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு வலியுறுத்தி, நாவலப்பிட்டியவில் போராட்டம்

Published By: J.G.Stephan

30 Jun, 2021 | 05:25 PM
image

மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.


எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியே குறித்தப் போராட்டம் இடம்பெற்றது.

" கொரோனாப்பிரச்சினை, பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டுவது போல  எரிபொருட்களின்  விலையும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மேலும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும்.

அதேபோல எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல்களும் அழிவடைந்து வருகின்றன. எனவே, உரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்." எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும் , ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களும், மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 




முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22