சிலம்பரசன் பட நடிகையின் கணவர் உயிரிழப்பு

By Gayathri

30 Jun, 2021 | 09:13 PM
image

சிலம்பரசனின் நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ என்ற படத்தில் நடித்த நடிகை மந்த்ரா பேடியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ராஜ் கௌசல் மாரடைப்பால் காலமானார்.

சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘மன்மதன்’ என்ற படத்தில் உளவியல் நிபுணராக நடித்து தமிழ் இரசிகர்களிடம் அறிமுகமானவர் பொலிவுட் நடிகை மந்த்ரா பேடி. 

இதனை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர், அண்மையில் பிரபாஸ் நடிப்பில் தமிழிலும் வெளியான ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். 

ஜீ வி பிரகாஷ் குமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘அடங்காதே’ என்ற படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கும் பொலிவுட் தயாரிப்பாளர் ராஜ் கௌசலுக்கும் 1999 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு ஒரு மகனும், தத்து எடுத்த ஒரு மகளும் இருகக்கிறார்கள். இந்நிலையில் 49 வயதான ராஜ் கௌசலுக்கு இன்று அதிகாலையில் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு பொலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right