முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூபா 11.4 பில்லியன் இலாபம் ஈட்டித்தந்துள்ளார்கள் என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.