சீனர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வருமாறு மகா சங்கத்தினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

By J.G.Stephan

30 Jun, 2021 | 01:46 PM
image

(எம்.மனோசித்ரா)
சீனர்களின் செயற்பாடுகளை பாதுகாக்கவே அரசாங்கம் முன்னின்று செயற்படுகிறது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் பாதுகாப்புபடை வீரர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார். நாட்டு மக்கள் பார்வையற்றவர்கள் என்ற எண்ணத்திலா அவர் இவ்வாறு கூறுகின்றார்?

வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களிலும், சில காவல் பணிபுரியும் தொழிலாளர்களும் இவ்வாறான ஆடைகளை அணிவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். எந்த பகுதிகளில் அவர் இதனை அவதானித்துள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு பொய் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.

திஸ்ஸமகாராம வாவியில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் முற்றிலும் தொல்பொருளியல் கட்டளை சட்டத்திற்கு முரணானவையாகும். தொல்பொருள் முக்கியத்துவம் உடைய இடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை யாரிடம் சென்று முறையிடுவது? காரணம் அரசாங்கம் சீனர்களின் நடவடிக்கைகளை பாதுகாப்பதிலேயே முன்னின்று செயற்படுகிறது.

எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் , பாதுகாப்புபடையினருக்கும் அழைப்பு விடுகின்றோம். இந்த விடயத்தில் தலையிட்டு எமது உரிமைகளை பாதுகாப்போம் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை...

2022-11-30 10:06:51
news-image

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிரான தொழிற்சங்க...

2022-11-30 10:22:31
news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 10:20:13
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06