பிரதமரை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் அரசியல் களத்தில் முன்னெடுப்பு: திஸ்ஸ விதாரண

Published By: J.G.Stephan

30 Jun, 2021 | 01:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை  பலவீனப்படுத்தும் செயற்பாடுகளே தற்போது அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படுகிறது. கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரச்சினை மற்றும் அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண பிரதமர் அக்கறை கொள்ளவில்லை. எம். சி. சி ஒப்பந்தம், சோபா ஒப்பந்தம் செயற்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமைத்துவமாக கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன  கூட்டணிக்கும் இடையில்  கருத்து வேறுப்பாடுகள் வலுப் பெற்றுள்ளன. கூட்டணியின் பங்காளி கட்சிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

  பாராளுமன்றில் உள்ள ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிக்கு ஆதரவு வழங்குபவர்களாக உள்ளார்கள். தற்போதைய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன. என்பதை பல்வேறு காரணிகள் ஊடாக அறிந்துக் கொள்ள முடிகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04