தமிழர்கள் நாட்டை பிரிப்பதாக சிறையில் அடைத்த அரசு, இன்று சீனர்களுக்கு மிதக்கும் கொட்டகை அமைத்து வேலை செய்ய அனுமதித்துள்ளது

Published By: Digital Desk 8

30 Jun, 2021 | 01:17 PM
image

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசு, இன்று சீனர்களுக்கு மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனையில் உள்ள கல்முனை பகுதியில் சீன நிறுவனத்தினால் அனுமதியற்ற கடலட்டை வளர்ப்பு தொடர்பில் பார்வையிட சென்ற பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட அட்டைப்பண்ணையை பார்ப்பதற்காக வந்திருந்தோம். 

குறித்த பகுதி கௌதாரிமுனை கல்முனை பகுதி மக்கள் காலம் காலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடல் அட்டை வளர்ப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைத்துள்ளார்கள். சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்றார்.

அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பினை மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்த பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களிற்கு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் இன்றைய தினமும் காட்டப்படவில்லை. 

இது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திஸ்ஸமகரகமவிலே சீன இராணுவத்தினருக்கு ஒப்பான உடையுடன் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக விசாரிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும்கூட, அந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தமிழர்களின் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் வந்து இந்த பிரதேச மக்களின் அனுமதியில்லாமல்  உள்நுழைந்திருப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீணே ஒரு பதட்டத்தை இந்த பிரதேச்த்தில் ஏற்படுத்தவதற்கு இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

மேலும்,  சீனர்கள் என்றதும் அரசு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றதா? என்ற கேள்வியும் இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35