இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான துயரமான சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெயசுந்தரம் சுலக்ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை, நேற்றுமாலை முதல் காணாமல்போனதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணி இடம்பெற்றள்ளன. இதன்போது வீட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கழிவு குழிக்குள் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், குழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிகின்றார் எனவும், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது மஸ்கெலியா தோட்டப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM