இரத்மலானை, கல்தேமுல்ல பகுதியில் நேற்றிரிவு கைக் குண்டுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

22 வயதான சந்தேக நபர், துபாயிலிருந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட ஏனைய குற்றச் செயல்களை முன்னெடுத்து வரும் ‘குடு அஞ்சு’ என்பவரின் நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கடையில் கம்பஹா பகுதியில் T56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.