நிறைவடைந்த யுத்தத்தை ஜனாதிபதி நினைவுகூர்ந்து அரசியல் இலாபம் பெற முயற்சி - தலதா அத்துக்கோரள

Published By: T Yuwaraj

30 Jun, 2021 | 05:49 AM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை முடிவுற்ற யுத்தத்தை மீண்டும் நினைவு கூர்ந்து அரசியல் இலாபத்தை பெற முயற்சிப்பதாகவே காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் எந்தவொரு ஜனாதிபதியும் இத்தகைய உரையை நிகழ்த்திருக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா  எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி | Virakesari.lk

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி 69 நிமிடங்கள் நிகழ்த்திய உரை மக்களின் அனுதாபத்தை வென்றெடுக்கும் வகையிலேயே அமையப் பெற்றிருந்தது.

இதன்போது நாடு முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை காரணம் காட்டும் வகையிலும் அவரது உரை அமையப்பெற்றிருந்தது.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை மீண்டும் நினைவு கூர்ந்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்ளவும் முயற்சித்திருந்தார். உலகளாவிய ரீதியில் இதுவரைகாலமும் ஆட்சியிலிருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இத்தகைய உரையை நிகழ்த்திருக்க மாட்டார்கள்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு ஆணைவழங்கியதாக தெரிவித்திருந்தார். தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற முரண்பாட்டில் 11 சிறைகைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பலரை ஆயுதங்களை எடுக்கச் செல்வதாக குறிப்பிட்டு அழைத்துச் செல்லும் போது , அவர்களும் பல காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் முன்னிலையிலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பான நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற முடியுமா? குற்றவாளி என்றாலும் அவருக்கும் வாழுவதற்கான உரிமைவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் எந்தவொரு இயற்கை அனர்த்தமும் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவர் அமெரிக்காவில் வசித்து வந்ததால் உண்மை நிலவரத்தை அறிந்திருக்காமல் இருக்கலாம். இவ்வாறு உரை நிகழ்த்துவதற்கு முன்னர் நன்கு ஆராய்ந்து பார்த்ததின் பின்னர் உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் "விஷம்...

2023-03-31 18:16:51
news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

நியூஸிலாந்துடனான தொடரில் தோல்வி அடைந்த இலங்கை...

2023-03-31 18:22:56
news-image

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து...

2023-03-31 18:23:10
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45