மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்க பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமையவே பணி இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 27ம் இரவு அத்துருகிரிய பகுதியில் வைத்து பிரதீப் குமார நிசாங்கவின் மனைவி மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவரான இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று இவர் கடுவளை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM