உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் -  சபாநாயகர் 

Published By: Digital Desk 4

30 Jun, 2021 | 08:07 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மின்சக்தி அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவி்டம் கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றது. 

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன ? | Virakesari.lk

அதன் பிரகாரம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இருக்கும் திகதி தொடர்பில்,  எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படுள்ளது.

அதன் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்ட திகதியில் இருந்து 5நாட்களுக்கு பின்னர், நிலையியற் கட்டளையின் பிரகாரம் எந்தவொரு தினத்திலும் அதனை விவாத்தக்கு எடுத்துக்கொள்ள முடியுமாகின்றது.

அதன் பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடும் எந்தவொரு  தினத்திலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 43பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25