(செ.தேன்மொழி)
கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதி களனி கங்கையில் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை, சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த சடலமான ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட மாந்திரீகர், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் , அவர்கள் இருவரும் ஹங்வெல்ல - எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இதன்போது கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை இருவர் மாந்திரீகரை கடத்திச் சென்றுள்ளதாக சந்தேக நபரான பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். எனினும் குறித்த பெண்ணுக்கும் எல்புல்கம பகுதியில் சாரதியாக தொழில்புரிந்துவரும் நபரொருவருக்கும் இடையில் காணப்பட்ட மற்றுமொரு தகாத தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சாரதி, பனுவஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் ஹோமாகம -பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் கொலைச் செய்வதற்காக பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM