நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு எதிர்வரும் 2017ம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட  பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, பாராளுமன்ற மறுசீரபைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பட்டார்.