'மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் சீனாவின் ஜின்ஜியாங்கிலிருந்து தப்பிச் சென்ற உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை கண்காணிக்கவும், தடுத்து வைக்கவும், திருப்பி அனுப்பவும் பீஜிங்குடன் ஒத்துழைத்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்'

மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் - ஜின்ஜியாங்கிலிருந்து தப்பிச் சென்ற சீனாவிலிருந்து உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினரை கண்காணிக்கவும், தடுத்து வைக்கவும், திருப்பி அனுப்பவும் பீஜிங்குடன் ஒத்துழைத்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உய்குர்கள் தொடர்பாக ஜுன் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம், 1997 முதல் மார்ச் 2021 வரை 28 நாடுகளில் 1,546 பேர் தடுப்புக்காவலிலும் மற்றும் நாடுகடத்தப்பட்ட வழக்குகளையும் எதிர்கொள்வதாக  தி ஃபிரான்டியர் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஒக்ஸஸ் சொசைட்டி மற்றும் உய்குர் மனித உரிமைகள் திட்டத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட தரவுத்தொகுப்பானது உய்குர்களுக்கு எதிரான சீனாவின் பிரசாரம் எவ்வாறு உலகளவில் வியாபித்துள்ளது என்பதைக் காட்டுகிறது,  குறிப்பாக இந்த பிரசாரம் மத்திய மற்றும் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை சென்றிருக்கின்றது.

'முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் ஜின்ஜியாங் உய்குர் முஸ்லிம்கள் மீது நடைபெறும் அடக்கு முறைக்கு எதிராக மௌனம் சாதித்து வருகின்றமைக்கு எதிராக ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன' என்று மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஒக்ஸஸ் சொசைட்டியின் ஆராய்ச்சிக்கான பணிப்பாளரும், ஆய்வறிக்கைளின் முதன்மை ஆசிரியருமான பிராட்லி ஜார்டின் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா ஃ ரேடியோ லிபர்ட்டி இற்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 

அத்துடன் 'உய்குர்கள் பற்றி இந்தப் புதிய தரவுத்தளமானது உய்குர்கள் தொடர்பில் இஸ்லாமிய உலகில் இருந்து வரும் பாசாங்குத்தனத்தை காட்டுவதோடு அந்நாடுகள் சீனாவின் செயற்பாடுகளில் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புக்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும்' அவர் குறித்த செவ்வியில் கூறியுள்ளார். 

இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அதிகாரிகள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உய்குர்கள், கசாக் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர் சீனாவின் ஒரு பரந்துபட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு கைதிகளாக இருந்த பலர், தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் கட்டாய கற்பித்தல், உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் கருத்தடைக்கு கூட உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் மனித உரிமை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அமெரிக்க, அரசாங்கமும்  மேற்கத்திய நாடுகளின் பல பாராளுமன்றங்களும் ஜின்ஜியாங்கில் சீனா முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று முத்திரை குத்தியுள்ளன, ஆனால் இந்த விடயத்தில் சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி (பி.ஆர்.ஐ) மூலம் பீஜிங்குடன் நெருக்கமான நிதி மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளின் பெரும்பாலான அரசாங்கங்கள் அமைதியாக இருக்கின்றன என்று தி ஃபிரான்டியர் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. 

வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகளின் பிரகாரம், உய்குர்களை குறிவைத்து அவர்களை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் 2017 முதல் தீவிரமடைந்துள்ளதாகவும் அதற்காக வெகுஜன தடுப்பு திட்டத்தை பீஜிங் ஜின்ஜியாங்கில் இருந்து ஆரம்பித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்த நடைமுறைகள் மூலம், சீன அரசாங்கம் உய்குர் மக்கள் மீது, அடக்குமுறையையும் கட்டுப்பாட்டையும் விதித்து தனது இறையாண்மை எல்லைகளை நீட்டிக்க முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஆரம்பத்தில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட முகாம்கள் இருக்கின்றன என்பதையே மறுத்தது. பின்னர் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக பீஜிங் 'தொழிற்கல்வி-கல்வி மையங்கள்' உருவாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டதோடு அதனை இராஜதந்திர, மக்கள் தொடர்பு மூலமாக பிரசாரம் செய்தது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாதத்தினை மையப்படுத்தி தற்போது வெளிநாடுகளில் உள்ள  உய்குர்களை சீனா குறிவைத்துள்ளது. தான் உய்குகளை குறிவைத்துள்ளமையை ஏற்றுக்கொள்ளும் சீனா பயங்கரவாதம் பற்றிய தனது கவலைகளை வெளிப்படுத்தி அதனை நியாயப்படுத்துகின்றது.  குறிப்பாக, உளவு நடவடிக்கைகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் முதலான விடயங்களை சுட்டிக்காட்டி உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பான இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிக்கையை வெளியிடச் செய்வதற்கும் வழிவகுக்கின்றது.

சீன அதிகாரிகள் நீண்ட காலமாகவே உய்குர் சமூகத்தை சந்தேகத்துடன் பார்த்து வருகின்றார்கள். குறிப்பாக தீவிரமான சிந்தனைகளைக் கொண்ட யுகூர் பிரிவினைவாதக் குழுக்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளன. குறிப்பாக ஜின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் 2009 நிகழ்ந்த இனக்கலவரம் பெய்ஜிங்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

இந்தக் கலவரத்தல்  200இற்கும் அதிகமான உயிர்கள் பலியாகின. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஹான்ஸ் இனத்தவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் தீவிரவாத உய்குர் குழுக்களின் தாக்குதல்களால் தான் உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இதனை அடுத்தே ஜின்ஜியாங்கில் பாதுகாப்பு நிலைமைகள் அதிகரித்தன.

விடேசமாக ஜின்ஜியாங்கில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காகவும் பீஜிங் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது. தனது இறுக்கமான செயற்பாடுகளை அதிகளவில் பிரயோகிக்க ஆரம்பித்தது. 

இந்த நிலைமைகள் பற்றி அமெரிக்காவில் உள்ள வில்சன் மையத்தின் கிஸ்ஸிங்கர் நிறுவனத்தின் முக்கியஸ்தரான ஜோர்டின் குறிப்பிடுகையில், 'சீனாவிலிருந்து உய்குர்கள் பெருமளவில் தஞ்சம் கோரி வெளியேற அங்கு ஏற்பட்ட அமைதியின்மையே வழிவகுத்தது. இதனால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அகதிகளாக உய்குர்கள் குடியேறினர். இதனால் உய்குர்கள் மீது சீனா உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தியது, அதேசமயம் பிராந்திய ரீதியாக மத்திய ஆசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் வழிவகுத்தது' என்றார். 

இவ்வாறிருக்க, வெளியாகியுள்ள தரவுத்தொகுப்பானது வெளிநாடுகளில் உள்ள உய்குர்களுக்கு எதிராக சீனா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மூன்று கட்டகளாக வகுத்து வெளிப்படுத்தியுள்ளது. 

அதில், முதற்கட்டமாக, மத்திய மற்றும் தெற்காசியாவில் உள்ள யுகூர் புலம்பெயர்ந்தவர்கள் இருக்கும் பகுதிகள் மீது  முக்கியமான கவனம் செலுத்தியது, இதனால் 1997முதல் 2007 வரையான காலப்பகுதியில் 89 உய்குர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் அல்லது சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். 

இரண்டாம் கட்டமாக, 2008 முதல் 2013 வரையான காலப்பகுதியல் இச்செயற்படு 15 நாடுகளை மையப்படுத்தி விரிவாக்கப்பட்டது. அதன்பிரகாரம் 130 நபர்களை குறிவைத்து நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் கட்டமாக, 2014 முதல் மார்ச் வரை, 20நாடுகளை மையப்படுத்தி நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டது. இதன்போது 1,327 பேர் தடுத்து வைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர்.

இதேவேளை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் சீனா இவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி  மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உய்குர்கள் மீது 647வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்காசியாவில் 665 வழக்குகள்  பதிவாகி உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் 11,051உய்குர்கள் அந்தந்த நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் 395 உய்குர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது மீண்டும் சீனாவுக்கே திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.

மேற்படி எண்ணிக்கையை கூட 'வாளியில் ஒரு துளி மட்டுமே' என்று ஜோர்டின் சுட்டிக்காட்டியதோடு 'தகவல்களை வழங்குவதற்கு முன்வந்த நபர்களை மட்டுமே தரவுசேகரிக்கும் செயற்றிட்டத்தில் உள்ளீர்த்ததாகவும் தெரியாத பல உய்குர்களின் வழக்குகள், தடுத்துவைக்கப்பட்ட நிலைமைகள் இருக்கின்றன'  என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலைமைகள் இவ்வாறிருக்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஜூன் 20 ஆம் திகதி அமெரிக்க செய்தி நிறுவனமான ஒக்ஸியோஸுக்கு அளித்த பேட்டியின் போது, ஜின்ஜியாங்கில் உய்குர்கள் தொடர்பில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மனித உரிமை மீறல்கள் எனக் கூறவோ அல்லது கண்டிக்கவோ மறுத்தார். இது தலைப்புச் செய்திகளாக வெளியானது. 

இஸ்லாமாபாத் மற்றும் பீஜிங் வலுவான உறவுகளைப் பேணுகின்றன, மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியில்  சீனா-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் (சி.பி.இ.சி) சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியில் முக்கிய பகுதியாக உள்ளது.

சீனாவுடனான பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பல தசாப்தங்கள் பழமையானது. அதேபோன்று  யூரேசியா முழுவதும் பீஜிங்கின் அதிகரித்த முதலீடு மற்றும் பொருளாதார உந்துதலுக்கு சீனா முனைப்பாகவும் செயற்படடு வருகின்றது என்பதையும் குறித்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

எவ்வாறாயினும், உய்குர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சீனா ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்தமைக்கான எந்தவிதமான ஆதரமும் இல்லை. என்றாலும், 1990 களின் பிற்பகுதியில் பாகிஸ்தான் வேறுவிதமான அடிப்படையில் சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளன என்பது வெளிப்படுவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்யுள்ளது. 

இதேவேளை, உய்குர் குழுக்களுக்கான வழக்கறிஞர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞரின் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர், அந்த ஆதரங்கள் அடங்கிய அறிக்கைகளில் தஜிகிஸ்தான் அரசாங்கம் பீஜிங்குடன் ஒத்துழைத்து வருவதைக் காட்டுகிறது. குறித்த ஆதர அறிக்கையில், துருக்கியில் இருந்து உய்குர்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக,  தஜிகிஸ்தான் அதிகாரிகள் பீஜிங்கிற்கு உதவுவதாகவும் குற்றம் சாட்ட்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து அகதிகளாக வெளியேறும் உய்குர் சமூகத்திற்கு பாதுகாப்பாக தங்கியிருப்பதற்கு துருக்கி ஒரு முக்கியமான இடமாக உள்ளது. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பல ஆண்டுகளாக உய்குர்களை துருக்கிக்கு வரவேற்றுள்ளார். அவர்கள் நிம்மதியாக தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டில் சுமார் 40 மில்லியன் உய்குர்கள் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஜிஞ்ஜியாங்கில் சீனா முன்னெடுத்து வரும் கடும் கொள்கைகளை விமர்சித்துள்ளார், 

2017இல் துருக்கி, பீஜிங்குடன் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால் துருக்கிய பாராளுமன்றம் இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. பீஜிங்கின் வேண்டுகோளின் பேரில் அவர்களில் பலர் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதைக் காணலாம் என்று உய்குர்கள் அச்சம் வெளியிட்டனர். ஆனால் 2020இல் நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கி இருக்கின்றன.

'துருக்கி ஒரு காலத்தில் உய்குர்களுக்கான பாதுகாப்பான புகலிடமாகக் காணப்பட்டது, ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை அங்கு இல்லை' என்று ஜோர்டின் கூறினார். ஆகவே, 'மேற்குலகம் தற்போது, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் உய்குர்கள் மீண்டும் நாடுகடத்தப்படுவதையும், அவர்கள் சீனாவிற்கு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் கையாள வேண்டும். 

ஏ.என்.ஐ