(இராஜதுரை ஹஷான்)
நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்ட பணத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இவ்விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
தண்ட பணத்தை ஒரு இலட்சமாக அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் அந்த யோசனையை பாராளுமன்றிற்கு அவசரசட்டமாக கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்களிடம் செய்துக் கொண்ட இரு தரப்பு இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பிரதேசங்களில் நிர்ணய விலைக்கு மாறாக அதிகவிலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
அரிசியின் விலையை நிலையான தன்மையின் பேணும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பளை செய்யும் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணம் 2500 ரூபாவாக காணப்படுகிறது.
இத் தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இத்தீர்மானத்தை செயற்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் இத்தீர்மானத்தை பாராளுமன்றில் அவசர சட்டமாக கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.
பல்வேறு காரணிகளினால் நெல் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு தேவையான நெல் மற்றும் அரிசி இருப்பில் உள்ளது.
ஆகவே ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலைமனுகோரல் பத்திரம் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM