இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான பயணத் தடையினை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஜூலை 15 வரை நீட்டித்துள்ளது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான பயணத் தடை இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் வெளிவந்த மிகவும் பரவக்கூடிய டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு பரவாமல் தடுக்க ஏழு நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.