ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு அப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவிப்பை சீனாவின் வெளியுறவு அமைச்சு நிராகரித்ததுடன், தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறும் வொஷிங்டனை கேட்டுக் கொண்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ஹொங்கொங் சீனாவின் உள்விவகார எல்லைக்குள்ளேயே உள்ளது. அங்கு நடைபெறுகின்ற உண்மையான விடயங்களை மதிக்க வேண்டும். குறித்த பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் சிறப்பு சட்ட அமுலாக்கத்திற்கு இடையூறு விளைவிப்பதை வொஷிங்டன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதாக இருக்கின்றன என்று கூறிய ஜாவோ ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியமைக்காகவே குறித்த பத்திரிகையின் மூத்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹொங்கொங்கில், தேசிய பாதுகாப்புக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் மற்றும், பத்திரிகை சுதந்திரம் உட்பட ஏராளமான மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக ஒரு சிலரைத் தகர்த்தெறியும் நோக்கில் அமுலாக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ஊடகத்தின் மூத்த அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தல் பத்திரிகை சுதந்திரத்தை ஒழிப்பதாகவோ அல்லது உண்மைகளை சிதைப்பதாகவோ அமையாது என்றும் ஜாவோ கூறியுள்ளார். சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறை காரணமாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட அப்பிள் டெய்லி செய்தித்தாள் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் கதவுகளை மூடியது. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “ஹொங்கொங்கிலும் உலகெங்கிலும் ஊடக சுதந்திரத்திற்கான சோகமான நாள்” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையொன்றில், அமெரிக்க ஜனாதிபதி பைடன், கைது, அச்சுறுத்தல்கள் மற்றும் சுதந்திரமான பேச்சுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தினை கட்டாயப்படுத்தி அமுலாக்குவதன் மூலம் பீஜிங் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கும், மறுபட்ட கருத்துக்களை மௌனமாக்குவதற்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தயுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திரமான ஊடகங்கள் நெகிழ வைப்பவை என்பதோடு, வளமான சமூகங்களில் விலைமதிப்பற்ற பங்கைக் கொண்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்பவர்கள், அவர்கள் தலைவர்களை பொறுப்புக்கூற வைத்திருக்கிறார்கள் தகவல்களை சுதந்திரமாகப் பாய்ச்சுகிறார்கள் - இது ஹொங்கொங்கிலும், ஜனநாயகம் இருக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இடங்களிலும் முன்பை விட இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது” என்றும் அந்த அறிக்கையில் பைடன் குறிப்பிட்டிருந்தார்.
ஹொங்கொங்கில் வெளியாகும் அப்பிள் டெய்லி கடந்த புதன்கிழமை தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே இந்த அறிவிப்பை விட்டிருந்தது. 26 வருட சேவைக்குப் பிறகு, இந்த முடிவினை அப்பிள் டெய்லி அறிவித்திருந்தது.
முன்னதாக ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு பிரிவானது, வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சதி செய்த சந்தேகத்தின் பேரில் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை கைது செய்து தடுத்து வைத்துள்ளது. பீஜிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை அமுலாக்கியதன் பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய முதற்தடவையாகும்.
இதனையடுத்து ஐந்து உயர் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதுடன் அப்பிள் டெய்லி அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது. இருப்பினும் தொடர்ந்து அப்பிள் டெய்லியின் தலைமையகத்தில் பொலிஸார் பரிசோதனைகளை நடத்தியதோடு ஏனைய நிர்வாகிகளையும் கைது செய்தனர்.
இதனால் அப்பிள் டெய்லி மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. குறித்த செய்தித்தாள் மூடப்படுவது சர்வதேச சமூகத்தால் பெரிதும் கண்டிக்கப்பட்டது, ஹொங்கொங் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பலர் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM