கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹிதசேவனா குடியிருப்பு வளாகத்தைத் தவிர சிங்கபுர கிராம சேவகர் பிரிவின் அனைத்து பகுதிகளும், கம்பாஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 வத்தை கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கம்பஹா, நுவரெலியா, காலி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டும் உள்ளன.