சதீஷ் கிருஷ்ணபிள்ளை
ஒரு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் மாநாடு. தேர்தலில் வென்றவர், நடுநாயகமாக இருந்தார். அவரைச் சுற்றி 100 ஒலிவாங்கிகளாவது இருக்கும். வென்றவர் பேசினார். தமது நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்தக்கூடிய திட்டங்களை விபரித்தார்.
அமெரிக்காவின் பெயரை உச்சரித்தபோது, நாம் ஏன் அடிபணிய வேண்டும் என்ற தொனி ஒலித்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தாம் பேசப் போவதில்லை என்றார். ஈரானின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவானவர் இப்ரஹிம் ரைசி. உலகிலுள்ள பெரும்பாலான ஊடகங்கள் அவருக்குக் கொடுத்த அடைமொழிகள் பொதுவானவை.
அவற்றுள் கடும்போக்காளர், தீவிர பழமைவாதி ஆகியவை முதன்மையானவை. மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவர் என்ற விபரிப்புக்கள். தமது நாட்டில் நூற்றுக்கணக்கானவர்களைத் தூக்கிலிட காரணமாக இருந்தவர் என்ற சித்தரிப்பு முதன்மைப்படுத்தப்பட்டது.
ரைசியின் வெற்றி அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திரத்திற்கு அடிக்கப்பட்ட சாவுமணி என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. தமக்குப் பொருத்தமான ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு. அதில் குடியரசின் பெறுமானங்களை மதிக்கும் தேர்தல் முறைமை. அதனுடாக ஈரானிய மக்கள் தமது ஜனாதிபதியைத் தெரிவு செய்தார்கள்.
ஈரானிய மக்கள் யாரைத் தெரிவு செய்கிறார்கள் என்பது, ஈரானியர்களை விடவும் மேலைத்தேய நாடுகளுக்குத்தான் அக்கறையான விடயம். ஈரானிய வெளிவிவகாரக் கொள்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது ஈரானிய மக்களின் விருப்பம்.
அதற்குள் அணுசக்தித் திட்டம் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை ஈரானிய தேசம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த அணுசக்தித் திட்டம் முக்கியத்துவம் பெறுவதற்கு பல காரணங்கள் உண்டு.
இது உலக வல்லரசுகள் கூடி உருவாக்கியதொன்று. 2015இல் திட்டம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இதனை உருவாக்கும் முயற்சிகளில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஐந்து நாடுகளுடன் ஜேர்மனியும் இணைந்திருந்தது.
ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்பது மேற்குலகின் கவலை என்றால், இந்த சர்வாம்ச கூட்டு செயற்றிட்ட ((Joint Comprehensive Plan of Action - JCPOA) உடன்படிக்கை கரிசனைக்குத் தீர்வு காண முனைந்தது.
இதன் கீழ், ஈரான் பல அணுசக்தித் திட்டங்களை முடக்கி விட வேண்டும். சர்வதேச கண்காணிப்பாளர்கள் அணுவாலைகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.
மேலைத்தேய வல்லாதிக்க சக்திகள் பொருளாதாரத் தடைகள் என்ற பெயரில் ஈரானின் மீது கட்டவிழ்த்து விட்ட அடாவடித்தனங்கள், அந்நாட்டு மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் பெரியது. இவற்றை பொருளாதாரப் பயங்கரவாதமெனக் கருதக்கூடிய அளவிற்கு மக்கள் சுமைகளை அனுபவிக்க நேர்ந்தது. சுயகௌரவம் மிக்க மனிதர்களைக் கொண்ட தேசம் என்பதால், இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் நிமிர்ந்து நின்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM