'சிலோன் டீ' பற்றி பெருமிதம் பேசிய ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சிந்தித்தாரா? - மனோ 

Published By: Digital Desk 4

28 Jun, 2021 | 10:11 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போது 'சிலோன் டீ' யைப் பற்றி பெருமிதமாகப் பேசினார். ஆனால் அந்த உழைப்பின் பின்னணியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.

நாட்டு தற்போது காணப்படுகின்ற உரப்பிரச்சினை தொடருமாயின் இலங்கைக்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தேயிலை துறை வீழ்ச்சியடையும் என்பதை ஜனாதிபதி நினைவில்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சிலோன் டீ தொடர்பில் பெருமிதமாக பேசும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அதனை உற்பத்தி செய்யும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் சிந்தித்தாரா? கொவிட் தொற்றுடன் தற்போது உரப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற உரப்பிரச்சினை தொடருமாயின் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தி சரிபாதியாகக் குறைவடையும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும். இது அந்நிய செலாவணி வருமானத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் சூழலும் அற்றுப்போயுள்ளது. எனவே சிறந்த அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறையாக தேயிலை ஏற்றுமதி மாத்திரமே காணப்படுகிறது.

எனவே அந்த துறை வீழ்ச்சியடையமால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு , பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

நாடு தற்போது பயணிக்கின்ற நிலைமையை அவதானித்து எல்லே குணவங்ச தேரர் கண்ணீர் வடிக்கின்றார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தினம் தினம் அரசாங்கத்தை தூற்றிக் கொண்டிருக்கிறார். இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலால் என்ற எதிர்பார்ப்பில் பேர்ள் கப்பலுக்கு அனுமதி வழங்கியமையால் மீனவர்களும் , மீன்பிடித்துறையும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் மீனவர்களும் , விவசாயிகளும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வீதியில் கைவிடப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் விடுவிக்கப்படவிருந்தவர்களாவர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் இதற்கான நடவடிக்கை எடுத்த போது எம்மை புலிகள் என்று விமர்சித்தனர். ஆனால் இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பேசிய போது , யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அதனை வரவேற்றார். இதுவே ராஜபக்ஷ தரப்பினருக்கும் சஜித் தரப்பினருக்கும் காணப்படுகின்ற வித்தியாசமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38