தாய்வானின் சுதந்திரம் என்பது போர் என்கிறது சீனா: தைப்பேயுடன் இராணுவ உறவுகளை 'துண்டிக்க' கேட்கிறது வொஷிங்டன்

Published By: J.G.Stephan

28 Jun, 2021 | 05:29 PM
image

“தாய்வானுடனான இராணுவ தொடர்புகள் அதிகரித்து வருவது குறித்து சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது, சுயாட்சித் தீவு சீனாவின் 'தவிர்க்கமுடியாத பகுதி' என்றும் அதன் சுதந்திரத்தை நாடுவது என்பது போர் என்றே பொருள்படுமெனக் கூறுகிறது”

சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரென் குய்கியாங், வெளியிட்ட அறிக்கையொன்றில், அமெரிக்காவிற்கும் தாய்வானுக்கும் இடையிலான எந்தவொரு உத்தியோகபூர்வ பரிமாற்றங்களையும் அல்லது இராணுவ தொடர்புகளையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும், வாஷிங்டன் 'தாய்வானுடனான அனைத்து இராணுவ உறவுகளையும் துண்டிக்க வேண்டும்' என்றும் கூறினார்.

சீனாவின் முழுமையான மீள் ஒருங்கிணைப்பு ஒரு வரலாற்றுத் தேவை என்றும், சீன தேசத்தின் புத்துணர்ச்சி பெருவளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்த முடியாது என்றும் ரென் கூறினார். தாய்வானின் கடற்பரப்பு முழுவதும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும் என்பது மக்களின் பொதுவான அபிலாஷைகளாகும். அத்துடன் 'தாய்வானின் சுதந்திரம்' என்பது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடயமாகும். 'தாய்வானின் சுதந்திரத்தினை தேடுவது போர் என்று பொருள்படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'சீனாவின் வளர்ச்சியை யாராலும் அல்லது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை முழுமையாக உணர வேண்டும் என்று அமெரிக்காவிற்கு நினைவுபடுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.  அமெரிக்கா சீனாவின் கொள்கைகளை மதிப்பதோடு, சீனா-அமெரிக்க கூட்டு கருத்துக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் தாய்வானுடனான அனைத்து இராணுவ உறவுகளையும் துண்டிக்க வேண்டும்' என்றும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறிருக்க, சுயாட்சி அதிகாரமுள்ள பிரிந்து செல்லும் மாகாணமாக கருதும் தாய்வானின் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களை சீனா தற்போது அதிகரித்துள்ளது.

சி.என்.என் உடனான நேர்காணலின் போது, தாய்வானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு, 'தாய்வானுக்கு சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகக் கூறியதோடு சுயாட்சித் தீவு ஒரு இராணுவ மோதலுக்கு தயாராக வேண்டும்' என்பதைக் காட்டுகிறது.

அண்மையில், தனது வான் பாதுகாப்பு வலயத்திற்குள், சீன போர் விமானங்கள் பல ஊடுருவல்களை செய்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. தாய்வானின் ஜலசந்தியில் பயிற்சிகளை நடத்துவதற்காக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) பல வகை விமானங்களை அனுப்பியுள்ளது.

இது தாய்வானின் ஜலசந்தி முழுவதும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையையும், தேசிய இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இவ்வாறு சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா தாய்வானின் சுயாட்சித் தீவுக்கு தனது ஆதரவை வழங்குவதற்கான செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.


குறிப்பாக, ஜி-7 அமைப்பின் கடந்த கூட்டத்தில் சீனாவின் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மையப்படுத்தி கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

எனினும், தாய்வான் நீர்ப்பரப்பு முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிஜீங் குறித்த அறிக்கையை 'அவதூறான குற்றச்சாட்டுக்கள்' என்று நிராகரித்தது.

இவ்வாறிருக்க, அமெரிக்க கடற்படை ஒவ்வொரு மாதமும் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் தாய்வான் நீரிணை வழியாக போக்குவரத்து நடத்தி வருகிறது. 'அமெரிக்காவை நம்பி சுதந்திரத்தை நாடுவதற்கான' எந்தவொரு முயற்சியும் தோல்வியுற்றதே என்று ரென் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்- ஏ.என்.ஐ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04