சத்ரியன்

“அரசியல் அனுபவம்மிக்க, நிர்வாக அனுபவம் நிறைந்தவர்களைக் கொண்ட, இந்த அரசாங்கத்தினால் ஏன் வினைத்திறனுடன் செயற்பட முடியாமல் போயிருக்கிறது என்ற கேள்வி உள்ளது”

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, இப்போதைக்கு அசைக்க முடியாத மிகவும் பலம்வாய்ந்த அரசாங்கமாகவே அது கருதப்பட்டது.

ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ என்ற இரட்டை ஆளுமைகளின் தலைமையில் இந்த அரசு உருவாக்கப்பட்டது. மேலதிகமாக அதற்கு, மூன்றில் இரண்டுக்கு நெருக்கமான பெரும்பான்மை பலமும் இருந்தது.

அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் செல்வாக்குமிக்கவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை, யாராலும் கவிழ்க்கவோ, அச்சுறுத்தவோ முடியாது என்றே கணிக்கப்பட்டது.

ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த அரசாங்கம் எல்லாத் தரப்பினராலும் மிரட்டப்படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது. பலம் இருக்கிறதோ இல்லையோ, விரைவில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று மிரட்டுகிறது எதிர்க்கட்சி.

இந்த அரசை வீழ்த்தி நாட்டுக்குப் புதிய தலைவனை தேடப் போவதாக அச்சுறுத்துகிறார்கள் பௌத்த பிக்குகள். விலை அதிகரிப்புக்கு இடமளிக்காவிட்டால், பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம் என்று மிரட்டுகின்றன தனியார் நிறுவனங்கள்.

இவ்வாறாக பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை நோக்கி மிரட்டுகின்றநிலை இப்போது தோன்றியிருக்கிறது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசாங்கத்தை அச்சுறுத்துகின்ற போக்கு தீவிரமடைந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக அனுராதபுரவில் பௌத்த பிக்கு ஒருவர் நடுவீதியில் அமர்ந்திருந்து ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் திட்டித் தீர்க்கும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இதனைப் பார்த்து கொதிப்படைந்தவர்களை விட, உள்ளூரில் அதனை இரசித்தவர்கள் தான் அதிகம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-3 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.