(க.கமலநாதன்)

எமது நாட்டில் உள்ள சகலரும் இன வேறுபாடுகள் இன்றி ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டும் என்ற  பிரகடனம் ஒன்றிணையும் சுதந்திர கட்சியின் 65 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் முன்வைக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலப்புரி அமைச்சர் எஸ.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

சிறிசேன ஈழத்தின் வாக்குகளால் தெரிவானவர் என்று பலரும் குறிப்பிட்டனர். இருப்பினும் கடந்த காலங்களை பார்க்கிலும் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் வடக்கு மக்களிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு கிடைத்த வாக்குகளின் தொகை அதற்கு முன்னரான தேர்தல்களில் அவர் பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகவே இருந்தாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.