பஷிலின் பாராளுமன்ற வருகைக்கு பின்வரிசை உறுப்பினர்கள் 40பேர் இணக்கம்: ஜனாதிபதி மற்றும் பிரதமரும் அழைப்பு

Published By: J.G.Stephan

28 Jun, 2021 | 01:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்கள். பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களில் 40 இற்கும் அதிகமானோர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். 

அனைத்து தரப்பினரது கோரிக்கைக்கமைய பஷில் ராஜபக்ஷ விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கிறோம் என  பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையானது, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பலமாக அமையும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

 பாராளுமன்றிற்கு வருகை தந்து அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரிடம் பலமுறை குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அவர் இதுவரையில் அவ்விடயம் குறித்து உரிய தீர்மானத்தை எடுக்கவில்லை.

  பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் பாராளுமன்றிற்கு வர வேண்டும் என 40ற்கும் அதிகமான பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்து அதனை எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கமைய பஷில் சாதகமான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15