அமைச்சுப் பதவியா ? மறுக்கிறார் மைத்திரி !

By Vishnu

28 Jun, 2021 | 12:55 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்காலத்தில் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று இன்று (28) ஊடகங்களில் வெளியான முதல் அறிக்கை முற்றிலும் தவறானது என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

தனக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வேறு எந்த பதவியையோ வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் கோரவில்லை, மைத்ரிபால சிறிசேன அத்தகைய பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right