சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானத்தை வெள்ளிக்கிழமை  வெளியிடுவோம் என  கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொரல்லையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்   இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது சம்மேளனத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்துக் கொள்வார்களா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்ற பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் மக்களுக்கு வெளியிடுவோம்.  இந்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதிக்கு அமைவாக கூட்டு எதிர்க்கட்சியின் ஏகோபித்த தீர்மானமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்