ஹரிகரன்

இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டப் பணிகளில் சீன இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்ற சர்ச்சை புதிதாக கிளம்பியிருக்கிறது. 

கி.மு 3 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும், திஸ்ஸமஹாராம குளத்தை ஆழப்படுத்தி புனரமைக்கும் பணிகள் தற்போது சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த புனரமைப்புத் திட்டத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் சீருடையை ஒத்த, இராணுவ சீருடை அணிந்த சீனர்கள் பணியாற்றுகின்ற ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்தே இந்த சர்ச்சை தோன்றியிருக்கிறது.

சீன இராணுவத்தினர் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றுகின்றனரா? என ஊடகங்களில் எழுப்பப்பட கேள்வியைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில், சீன இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் வெளிநாட்டவர்கள் இங்கு பணியாற்றுகின்றனரா? என்று மனுஷ நாணயக்கார, கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து யாரும் பதிலளித்திருக்கவில்லை. இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் இலங்கை அரசாங்கம் சீன இராணுவத்தினர் எவரும் அல்லது இராணுவ சீருடையணிந்த சீனர்கள் எவரும் இலங்கையில் பணியாற்றவில்லை என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அதேவேளை, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாகவே இந்தச் செய்தியை மறுப்பதற்குப் பதிலாக ஊடகங்களின் மீது பாய்ந்திருக்கிறது. சீனா அண்மைக்காலமாக ஓநாய் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.