துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள நியாயத்தில் எவ்வித அரசியல் நோக்கங்களும் கிடையாது: ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

By J.G.Stephan

28 Jun, 2021 | 12:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறந்த முறையில் ஆராய்ந்தே இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், முறைகேடுகளும் கிடையாது என நெடுஞ்சாலை அபிவிருத்தி  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மாத்திரமல்ல பல தரப்பினர் அரசியல் பழிவாங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை  அவசரத்தில் எடுத்த தீர்மானம் என கருத முடியாது. பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக அவருக்கு நியாயம் கிடைக்கப் பெற்றுள்ளது.  

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்குள்ளான அனைவருக்கும் நியாயம் வழங்கப்படும் அத்துடன்  அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியவர்களுக்கு  எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள் . இதனால் எவ்வித பாதிப்பும் அரசாங்கத்திற்கு ஏற்படாது.

கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்று பொதுஜன பெரமுன ஆட்சியமைத்த காலத்தில் இருந்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  மற்றும் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ  பாராளுமன்றம் வருகிறார். என்று குறிப்பிடப்படுகிறது.  பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதில் ஆளும் தரப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.எதிர் தரப்பினரே  அவரது வருகை குறித்து அச்சம் கொள்கிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right