ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக போராளிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க இராணுவம் சிரியாவில் இரு இடங்களிலும், ஈராக்கில் ஒரு இடத்திலும் செயற்பட்டு வந்த போராளிகளின் ஆயுத சேமிப்பு நிலையங்கள் குறிவைத்ததாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
எனினும் தாக்குதல் காரணமாக யாராவது உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
ஆனால் பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் அமெரிக்காவின் அண்மைய தாக்குதலில், குறைந்தது ஐந்து போராளிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் கூறியது.
அதேநேரம் சிரியாவின் அரசு நடத்தும் சனா செய்தி நிறுவனம், ஒரு குழந்தை கொல்லப்பட்டதாகவும், குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழிகாட்டுதலின் பேரில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பின்னர் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் நடவடிக்கைக்கு அவர் இரண்டாவது முறையாக இதன்மூலம் உத்தரவிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் சிரியாவில் ஒரு இலக்குக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பை நடத்த பைடன் இறுதியாக இறதியாக உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM