இரத்தினபுரி மற்றும் மெனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளும், மெனராகலை, மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.