குமார் சுகுணா

இந்த பூமியில் பிறந்து மடியும் அனை­வரும் சரித்­தி­ரத்தில் இடம் பிடிப்­ப­தில்லை. ஒரு சிலர் மட்­டுமே சரித்­தி­ரத்தில் இடம் பிடிக்­கின்­றனர். ஆனால் சரித்­தி­ரத்தை மாற்­றி­யெ­ழுதி சரித்­தி­ர­மாக மாறுவோர் இறந்­தாலும் உயி­ரோடு இருப்­பதை விட பல மடங்கு மதிக்­கப்­படும் சரித்­திர நாய­கர்­க­ளாக உள்­ளனர். அவர்­களின் முதன்­மை­யா­னவர் சேகு­வேரா.

அவர் இறந்­தி­ருக்க வேண்­டி­யவர் அல்ல. ஆனால், பண ஆசைப்­பி­டித்த  யூதாஸ்,  எட்­டப்பா போன்ற வழித்­தோன்­றல்­களில் வந்­த­வரால் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டார்.

ஆம், ஆடு மேய்க்கும் பெண் ஒரு­வர்தான் சேகு­வே­ராவை காட்­டிக்­கொ­டுத்தார். அவர் மூலம்  பொலி­விய இரா­ணு­வத்­திற்கு சேகு­வேரா பற்­றிய தகவல் கிடைத்­ததும், பொலி­விய இரா­ணுவம் அவரை சுற்றி வளைத்து சுட்­டது. பிறர் நல­னுக்காய் பொலி­வி­யாவில் அன்று மூச்­சி­ழந்த சேகு­வேரா, இன்றும் புரட்­சியின் முக­வ­ரியாய்  உலகம் முழு­வ­திலும் உள்ள மக்­களின்  இத­யங்­களில் வாழ்ந்து வரு­கின்றார்.

1928 ஆம் ஆண்டு ஜூன் பதி­னான்காம் திகதி ஆர்­ஜென்­டினா மாகா­ணத்­தி­லுள்ள ரொசா­ரியா என்னும் இடத்தில் ஏர்­னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசி­லியா தம்­ப­தி­யர்­க­ளுக்கு மூத்த மக­னாக பிறந்தவர் 'ஏர்­னெஸ்டோ குவேரா டி ல செர்னா' - இதுதான் சேகு­வே­ரா­விற்கு பெற்றோர் வைத்த பெயர்.

சேகு­வே­ராவின் குடும்பம் சொந்­த­மாக தேயிலை, மூலிகை பண்­ணை­களை வைத்து இருக்கும் அள­விற்கு பெரிய குடும்பம். எனவே அவரின் இளமைப் பருவம் மிக சிறப்­பான வகை­யி­லேயே அமைந்­தது.

சேவின் தாயார் நீச்­சலில் ஈடு­பாடு கொண்­டவர். சேகு­வே­ரா­விற்கு இரண்டு வய­தாக இருக்­கும்­போது அவரை காலைப்­பொ­ழுதில் நதிக்கு அழைத்துச் சென்று நீராட வைப்­பாராம். இதன் கார­ண­மா­கவே அவ­ருக்கு நுரை­யீ­ரலில் நிமோ­னியா நோய் தாக்கி ஆஸ்­துமா ஏற்­பட்­டது. இந்நோய் சேகு­வே­ராவின் வாழ்நாள் முழு­வதும் பாதித்து கொண்­டேதான் இருந்­தது.

இருப்­பினும் சேகு­வேரா விளை­யாட்­டு­களில் சிறந்து விளங்­கினார். அவர் ஒரு சிறந்த ரக்பி விளை­யாட்டு வீரர். இவரின் தாக்­குதல் பாணி விளை­யாட்டு கார­ண­மாக இவரை பூசெர் என்னும் பட்டப் பெய­ரிட்டு அழைத்­தனர்.

சிறு­வ­யதில் இருந்து பொறியியலாளராக போவ­தாக கூறி­வந்த குவேரா, திடீ­ரென்று மருத்­து­வ­ராக போவ­தாக சொன்­னதும், பெற்­றோ­ருக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­துள்­ளது. 

“ஏண்டா திடீர்னு இந்த முடி­வுக்கு வந்த? என்றாள் அம்மா. “இதில் என்­னோட சுய­ந­லமும் இருக்­கும்மா. நானே ஒரு நோயாளி. எனக்கே தினமும் சிகிச்சை அளிக்க வேண்­டி­யி­ருக்கு. வீடுகள், தொழிற்­சா­லைகள் கட்­டு­வதைக் காட்­டிலும் மனு­ஷ­னோட நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தாம்மா போது­மான அள­வுக்கு ஆள் இல்ல.”

மகனின் பேச்சு தாய்க்கு நிம்­மதி அளித்­தது. தனக்­காக மட்­டு­மின்றி, பிற­ரு­டைய நிலை­யையும் இணைத்துப் பார்க்கும் பக்­கு­வ­மான சிந்­தனை அதில் வெளிப்­பட்­டதைப் புரிந்­து­கொண்டாள். வீட்டில் எல்­லோ­ருக்கும் மகிழ்ச்சி. அப்­பா­வுக்கு அள­விட முடி­யாத சந்­தோஷம். ஆர்­ஜென்­டி­னாவின் தலை­நகர் பியூனஸ் ஏர்ஸில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தில், 1948 ஆம் ஆண்டு  மருத்­துவ மாண­வ­னாக குவேரா நுழைந்தார். அவருக்­கா­கவே குடும்­பத்­தி­னரும் பியூனஸ் ஏர்ஸில் குடி­யே­றினர்.

சேகு­வேரா புத்­த­கத்தின் மீது வைத்­தி­ருந்த காதலை வெளிப்­ப­டுத்தும் வகையில் தனது வீட்டில் 3000 இற்கும் மேற்­பட்ட புத்­த­கங்­களை வைத்­தி­ருந்தார். தனது வாழ்நாள் முழு­வதும் கவி­தைகள் மீது ஆர்வம் கொண்­ட­வ­ரா­கவும்  சேகு­வேரா இருந்­துள்ளார்.

ஆர்­ஜென்­டினா இராணு­வத்­திற்கு கட்­டாய ஆட்­சேர்ப்பு நடை­பெற்­றது. கல்­லூரி வளா­கத்தில் நடை­பெற்ற தேர்வில் குவேரா கலந்­து­கொண்டார். ஆனால், அவருக்கு இருந்த ஆஸ்த்­துமா தொந்­த­ரவைக் காரணம் காட்டி, தேர்வு செய்ய மறுத்­து­விட்­டனர்.

20 வயதில் அடி­யெ­டுத்து வைத்த குவேரா எழு­திய கவிதை வரிகள் அவருடைய இலக்கு எதை நோக்கி இருக்­கி­றது என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யது. “எனக்கு அது தெரியும், எனக்கு அது தெரியும். இங்­கி­ருந்து வெளி­யே­றினால், அந்த நதி என்னை விழுங்­கி­விடும்.

அது எனது விதி ; இன்று நான் கட்­டாயம் மரிக்க வேண்டும்.

ஆனால், அனைத்­தி­லி­ருந்தும் மீள என்­னிடம் ஆற்றல் இல்லை

தடை­களே அவைதான். அதை நான் ஒப்­புக்­கொள்­கிறேன்.

வெளியே வர எனக்கு விருப்­ப­மில்லை.

ஒரு­வேளை நான் மரிக்க நேர்ந்தால்,

இந்த குகை­யி­லேயே அது நிக­ழட்டும்.

துப்­பாக்கி ரவைகள்...அந்த ரவைகள் என்னை என்ன செய்­து­விடப் போகின்­றன? ஆற்றில் மூழ்­கியே சாக­வேண்டும் என்­பது என் விதி. ஆனால், நான் விதி­யி­ட­மி­ருந்து மீளப் போரா­டப்­போ­கிறேன்.

விதியை மதி­நுட்­பத்தால் வெற்­றி­கொள்ள முடியும். இறந்­து­விடு, ஆம், துப்­பாக்கி ரவை­களால் துளைக்­கப்­பட்டு...துப்­பாக்­கியின் நுனியில் உள்ள கத்­தி­களால் கிழிக்­கப்­பட்டு... அப்­படி இல்­லையேல், மூழ்­கி­வி­டாதே, விடாதே... போராடு, இறு­தி­வரை போராடு.”

1951 ஆம் ஆண்டு ஓராண்டு விடுப்பு எடுத்­துக்­கொண்டு அவ­ரது நண்பர் ஆல்­பர்ட்டோ கிரெ­னா­டோ­வுடன் சேர்ந்து தொழு நோய்க்கு தன்னால் மருந்து கண்­டு­பி­டிக்க முடி­யுமா? என எண்ணி தனது ஈரு­ரு­ளியை எடுத்­துக்­கொண்டு தென் அமெ­ரிக்கா, அமேசான் முழு­வதும் சுற்றித் திரிந்தார்.

அங்கு அவர் பார்த்த ஒரு காட்சி சேகு­வே­ராவின் புரட்சி பாதைக்கு வித்­திட்­டது. அமெ­ரிக்­கர்­களின் ஆளுமைதான் அது. அப்­போ­தி­லி­ருந்து சேகு­வேரா புரட்­சியில் ஈடு­பட தொடங்­கினார். அதன்­பி­றகு ஆர்­ஜென்­டினா திரும்­பி­வந்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்­லூரி படிப்பை முடித்து மருத்­துவர் பட்டம் பெற்றார். 

ஸ்பானிய மற்றும் ஆர்­ஜென்­டி­னாவின் பூர்­வ­கு­டி­யினர் இணைந்து உரு­வான இனம் மெஸ்­டிஸோ என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. தென்­அ­மெ­ரிக்­கா­வி­லேயே ஆர்­ஜென்­டி­னா­வில்தான் பூர்­வ­கு­டி­மக்கள் வேரோடு அழிந்­து­போ­யி­ருந்­தனர். இன்­னமும் கிரா­மப்­பு­றங்­களில் அந்த மக்கள் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, அடி­மை­க­ளைப்­போல வாழ்­வ­தாக ஆல்­பர்ட்டோ சொன்­ன­போது, குவே­ராவும் ஆமோ­தித்தார்.

நெருங்­கிய தோழர்­களை சே என்று அழைப்­பது குவே­ராவின் வழக்கம். சே என்றால் ஆர்­ஜென்­டினா மொழியில் தோழர் என்று அர்த்தம். ஒரு­வ­ழி­யாக எதிர்­கா­லத்தில் என்ன செய்­வது என்­பது குறித்து முடி­வெ­டுக்கும் நிலையை நெருங்­கி­விட்­டனர்.

பின்னர், அவர் தனது பய­ணத்தை முடித்­த­போது சுமார் 4 ஆயி­ரத்து 500 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்­தி­ருந்தார். வீட்­டுக்குத் திரும்­பி­வந்து தனது அனு­ப­வங்­களைச் சொன்­ன­போது, அவர்  குடும்பமே மகிழ்ச்சியடைந்தது.

தொழு­நோய்க்கு மருந்து கண்­டு­பி­டிக்கும் பய­ணத்தில், தென்­அ­மெ­ரிக்கா, அமேசான் போன்ற நாடு­களில் சுற்றித் திரிந்து எடுத்த குறிப்­பு­களை மோட்டார் ஈரு­ருளிப் குறிப்­புகள் (The Motorcycle Diaries) என்ற நூலில் எழு­தினார்.

இந்நூல் பின்­நாட்­களில் நியூயோர்க் டைம்சின் அதிக விற்­பனை செய்­யப்­பட்ட நூலாகத் தெரிவு செய்­யப்­பட்­டது. அது­மட்­டு­மின்றி இந்­நூலின் பெயரில் 2004 ஆம் ஆண்டில் ஒரு திரைப்­படம் எடுக்­கப்­பட்டு பல விரு­து­க­ளையும் குவித்­தது.

1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு கடத்­தப்­பட்ட கியூபா மக்­களைச் சந்­தித்த சேகு­வேரா கம்­யூ­னிஸ்­டு­க­ளிடம் நெருங்கி பழ­கினார். மார்க்­சிய லெனி­னிய பாதையே தன் பாதை என்­ப­தையும் உணர்ந்தார்.

இச்­ச­ம­யத்தில் சேகு­வேரா கியூ­பாவின் விடு­த­லைக்­காக போராட முடி­வெ­டுத்தார். காஸ்ட்­ரோ­வுடன் இணைந்து போராடினார். காஸ்ட்­ரோ­வுக்­கா­வது கியூபா சொந்த நாடு, ஆனால் சேகு­வே­ரா­விற்கு அப்­படி இல்லை. இருப்­பினும் சேகு­வேரா கியூ­பாவின் விடு­த­லைக்­காக போராட முடி­வெ­டுத்தார். இத­னா­லேயே அவர் மனி­தருள் மாம­னி­த­ராக போற்­றப்­ப­டு­கிறார்.

புரட்­சிக்­கான திட்­டங்கள் தீட்­டப்­பட்டு ஒன்­றரை ஆண்­டுகள் ஆயுதப் பயிற்சி நடை­பெற்­றது. கொரில்லா போர்­முறை தாக்­குதல் மூலம் அப்­போ­தைய இராணு­வத்தை முடக்க நீர் வழி பயணம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டனர். க்ரான்மா எனும் கள்ளத் தோணியில் சேகு­வேரா, காஸ்ட்ரோ உட்­பட 82 வீரர்கள் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி கியூ­பா­விற்கு பய­ணப்­பட்­டனர். 

1957 ஆம் ஆண்டு ஜன­வரி 17 ஆம் திகதி பாடிஸ்டா இராணுவ தள­பதி லாப்­லட்டோ கொல்­லப்­பட்டார். இதுவே புரட்­சி­யா­ளர்­களின் முதல் வெற்­றி­யாக அமைந்­தது. 1958 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூபா தலை­நகர் ஹவானா புரட்­சி­படை வசம் வந்­தது. அதன் பின் கியூ­பாவின் ஆட்சி அதி­காரம் காஸ்ட்­ரோ­விடம் வந்­தது.

1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கியூபா பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­வுடன் சேகு­வேரா தேசிய வங்­கியின் அதி­ப­ரா­கவும், விவ­சாயத் துறையில் தேசியத் தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். ஆயினும்  தன்னை ஒரு சாதா­ரணக் குடி­ம­க­னா­கவே அடை­யாளம் காட்டிக் கொண்டார். கரந்­தடிப் போர்­முறை பற்­றிய பல கட்­டு­ரை­க­ளையும், புத்­தங்­க­ளையும் எழு­தி­யி­ருந்தார். 

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திக­தி­யன்று கியூ­பாவின் பிர­தி­நி­தி­யாக ஐக்­கிய நாடுகள் அவையின் 19 ஆவது பொது அமர்வில் உரை­யாற்­றினார். பின்னர், 1965 ஆம் ஆண்டில் கியூ­பாவில் இருந்து வெளி­யே­றினார். காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ ‘சே’வை சுடு சொல்லால் அழைத்­த­தா­கவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப்படுத்­தி­ய­தா­கவும், அதுதான் ‘சே’ கியூ­பாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படு­வ­துண்டு. உண்­மையில் ‘சே’ பிடல் காஸ்ட்­ரோவின் முன்­னி­லையில் தனது எல்லா பத­வி­க­ளையும் கியூபா நாட்டு குடி­யு­ரி­மை­யையும் துறந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் கெய்ரோ வழி­யாக கொங்­கோ­விற்கு இரக­சி­ய­மாகப் பய­ணித்தார். அவ­ரது பதவி மற்றும் கியூ­பாவின் குடி­யு­ரிமை துறப்பு பற்றிய செய்­தியை பிடல் காஸ்ட்ரோ ஒக்­டோபர் மாதம் கியூபா மக்­க­ளுக்கு அறி­வித்தார்.

1966ஆம் ஆண்டின் கடை­சி­களில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு போலி கட­வுச்­சீட்­டுடன் பொலி­வியா நாட்­டுக்குள் நுழைந்தார். பொலி­வி­யாவில் நடந்த கொரில்லாப் புரட்­சியின் போது பொலி­வியக் காடு­களில் பதுங்கி இருந்தார். தட்­ப­வெப்ப சூழ்­நி­லை­களின் முரண், கலா­சாரப் புரி­த­லின்மை போன்­ற­வையே அவ­ரது திட்­டங்­களின் தோல்­வி­க­ளுக்குக் காரணம். இன்­னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அர­சியல் நண்­பர்­க­ளாக நம்பி இருந்­தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்­யாமல், மௌன­மாகக் கைகட்டி வேடிக்கை பார்த்­ததும் தோல்­விக்­கான முக்­கி­ய­மான கார­ணங்­களில் ஒன்று. 

மன­வே­த­னை­யுடன் ஆஸ்­து­மாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்­தது. போதிய வீரர்கள் இல்­லா­தது மற்றும் உண­வின்மை போன்ற பிரச்­சி­னை­க­ளுடன் ‘சே’ காடு­களில் அழைந்தார்.

1967 ஆண்டு ஒக்­டோபர் மாதம் 08 ஆம் திகதி தென் அமெ­ரிக்கச் சரித்­தி­ரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30 யூரோ கண­வாயை ஆறு கொரில்லா வீரர்­க­ளுடன் ‘சே’ கடந்து செல்­கிறார். வழியில் தென்­பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரி­தா­பப்­பட்டு ஐம்­பது பெஸோக்­களைப் பரி­சாகத் தரு­கிறார். அந்தக் பெண் பொலி­விய இரா­ணு­வத்­துக்கு ‘சே’வின் இருப்­பி­டத்தைக் காட்டிக் கொடுக்­கிறாள்.  தன்னைச் சுற்றித் துப்­பாக்­கி­யுடன் சூழ்ந்த பொலி­விய இராணு­வத்­திடம், ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்­பதைக் காட்­டிலும், உயி­ருடன் பிடிப்­பது உங்­க­ளுக்குப் பய­னுள்­ள­தாக இருக்கும்’’ என்­கிறார்.

சேகு­வேரா பிடி­பட்டார் என பொலி­விய இரா­ணுவம் சி.ஐ­.ஏ-­.விற்கு தகவல் தெரி­வித்­தது. அதே நேரத்தில் சேகு­வேரா உயி­ருடன் இருக்கும் பொழுதே இறந்­து­விட்டார் என பொலி­விய இரா­ணு­வத்தால் மக்­க­ளுக்கு பொய்­யான தகவல் பரப்­பப்­பட்­டது.

சேகுவேராவை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால் புரட்சி வெடிக்கும் என்பதால் அவரைக் கொன்று விடுங்கள் என்று சி.ஐ.ஏ.விடம் இருந்து தகவல் வந்தது. சேகுவேராவை சுட்டுக் கொல்ல இராணுவம் முடிவுசெய்தது. மரியோ எனும் இராணுவ அதிகாரி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனிமையான இடத்திற்கு மரியோ சேவை அழைத்துச் சென்று கொல்ல தயாரானார். 

“முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது மேல்” என்றார் சேகுவேரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாரானார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவேரா கேட்டார். அதை ஒரு பொருட்டாகவே மரியோ எடுத்துக்கொள்ளவில்லை.

உலகப் புகழ்பெற்ற, விடுதலைக்காகப் போராடிய, சாதி, மதம், மொழி, இனம் என்று எதுவும் பாராத ஒரு மாமனிதனை நோக்கி ஒன்பது தோட்டாக்கள் பாய்ந்தது. அதில் ஒன்று சேகுவேராவின் இதயத்தை பதம் பார்த்தது. மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன். இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் விடை பெற்றார். ஆனால் உலகம் முழுவதிலும் இன்னும் மக்கள் அவரை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.