கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவியை துறப்பதற்கு தயங்குகின்றனர் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சியின் 65 ஆண்டு நிறைவு விழா தொடர்பில் விழிப்புணர்வூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.