நவ நாகரீக அழகியல் கலை அல்லது ஃபேஷன் என்ற சொல் முன்பு பாவமாகக் கருதப்பட்டதொரு சூழல் காஷ்மீரில் இருந்தது. அவ்வாறானதொரு பழமைவாத சமுதாயத்தில் நவ நாகரீக ஆடை பள்ளியை நிறுவுவதென்பது எளிதான விடயமல்ல.

காஷ்மீர் சமூகம் எப்போதுமே கலைகளின் புரவலர் என்று அறியப்படுகின்றது. நவ நாகரீக வடிவமைப்புகள் உலகின் புத்தாக்கத்தை உருவாக்கவும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகும். ஆனால் இத்துறைக்கு  இளம் பெண்களில் கூடிய ஆர்வம் காணப்பட்ட போதிலும் பழமைவாத பெற்றோர்கள் விரும்புவதில்லை.

எஸ்.எஸ்.எம்.டி ஃபேஷன் பள்ளியின் நிறுவனர் இன்ஷா எஸ். காசி தன்னை பேஷன் டிசைனிங் பற்றி ஆய்வு செய்யும் கலை மற்றும் சமகால வடிவமைப்பின் புரவலராக திகழ்கின்றார். பேஷன் என்பது ஒரு மரபுவழி கலாச்சாரத்தில் ஒரு வலுவான கூற்று என்றே அவர் நம்புகிறார்.  இது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதுடன் எவ்வித தடையுமின்றி தாம் விரும்பியதை அணியும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

இந்த பள்ளியை 2016 இல் தொடங்கினோம். பல நெருக்கடிகள்  ஏற்பட்டன. காஷ்மீரின்  கிளர்ச்சித் தலைவர்கள் கடுமையாக அச்சுறுத்தினர். எனவே சுமார் ஒரு வருடம் வரை மூட வேண்டியிருந்தது. இருப்பினும் அடுத்த ஆண்டுகளில் ஆரம்பிக்க கூடிய  சூழல் ஏற்பட்டது. இளம்  ஆர்வமுள்ள மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதன் பின்னர் மக்களின் கருத்து ஃபேஷன் கல்வியை நோக்கி மாறத் தொடங்கியது. அதிக வருமானத்தை கொண்ட தொழில் என்பதால் அவர்களின் ஆர்வமும் அதிகரித்தது என்று இன்ஷா எஸ். காசி  தெரிவித்தார்.

பள்ளியைத் தொடங்கியதிலிருந்து காஷ்மீரி ஃபேஷன் எவ்வாறு உணரப்படுகிறது என்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. நாங்கள் தடைகளை உடைக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கினோம் என்றும் குறிப்பிட்டார். குரல், அச்சு மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்துவமான குரலில் கவனம் செலுத்தி கற்பித்தோம்.

இந்த ஆண்டுக்கான முதலாவது பேஷன் ஷோவை காஷ்மீரில் நடத்தினோம். ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருப்பினும் பேஷன் ஷோவின் சில நாட்களுக்குப் பிறகு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதனால் வீதி போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும் உறுதியாக செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்.