- சிவலிங்கம் சிவகுமாரன் -

தகவல் அறியும் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வு

அட்டன் பொலிஸ் தலைமை காரியாலய நிர்வாகப்பிரிவில் அடங்கும் 8 பொலிஸ் நிலையங்களில் ஒரு நிலையத்தில் கூட தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இல்லை. 8 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 88 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களில்  அதிகபட்ச தரம் பெற்றவர்களாக  இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்களே உள்ளனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் தமிழ் உத்தியோகத்தர்கள் அல்லது தமிழ் தெரிந்த பெரும்பான்மையின உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக  தமது சேவைகளைப் பெற குறித்த நிறுவனங்களுக்கு வருகை தரும் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அந்த வகையில் பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகளை செய்யவும் சட்டரீதியாக தீர்வுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கும் இந்த மக்கள் இன்றளவும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பெருந்தோட்ட நகரங்களை அண்மித்துள்ள நகர பொலிஸ் நிலையங்களில் இப்பிரதேசத்தை சாராத இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படும் போது மக்களுக்கு பல சிக்கல்கள் எழுகின்றன. சில தோட்ட நிர்வாகங்கள் கூட அண்மைக்காலமாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க இவ்வாறான பொலிஸாரை நாடி வருவது கவலைக்குரிய விடயம். இந்நிலையில் பெருந்தோட்ட மக்களும் தமிழ் வர்த்தகர்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் அதிகமாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் பிராந்திய பொலிஸ் நிர்வாகத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, அவர்களின் பதவி நிலைகள், தமிழை விளங்கிக்கொண்டு குறித்த மக்களிடம் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய பெரும்பான்மை பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களைப் பெற்றுக்கொள்ள அட்டன்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு 2019 ஆம் ஆண்டு மே மாதம் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் 3 மாதங்கள் கழித்து தகவல்களை தர முடியாது என்ற அடிப்படையில் (பிரிவு 5 (1) ) விண்ணப்பம் பொலிஸ் அத்தியட்சகரால் நிராகரிக்கப்பட்டிருந்தது. பின்னர்  கொழும்பு பொலிஸ் தலைமை காரியாலயத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு விண்ணப்பம் மீண்டும் அனுப்பப்பட்டாலும் கடிதத்தை பொறுப்பேற்க முடியாது என எழுதப்பட்டு கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2021-06-27#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.