தம்புள்ளை ரங்கிரி மைதான பிரதான நுழைவாயிலை மறித்து இலங்கை அணியின்  ரசிகர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை முன்னெடுத்துள்ளனர்.

மைதானத்திற்குள் அனுமதிக்குமாறு கோரியே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தினால் தம்புள்ளை குருணாகல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.