பஷில் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியது காலத்தின் தேவையாகும்: நிமல் லன்சா

By J.G.Stephan

27 Jun, 2021 | 02:16 PM
image

(எம்.மனோசித்ரா)
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பக்கபலமாக இருப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வெளியிலிருந்து செயற்படுவதைவிட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே தேவையாகும் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறை உள்ளிட்ட ஏனையதுறைகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். எனவே பஷில் இது தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

பஷில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முழு பொருளாதார முகாமைத்துவம் , நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகளில் பஷில் அர்ப்பணிப்புடன் பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம், கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் உள்ளிட்ட வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்கு அவர்கள் தலைமைத்துவம் வகித்துள்ளார் என்றார். 

ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் ஊடாகவும் , வரவு - செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கும் , பிரதமருக்கும் பக்கபலமாக இருப்பதற்கு பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வெளியிலிருந்து செயற்படுவதைவிட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே காலத்தின் தேவையாகவுள்ளது என மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33