கட்டுநாயக்க  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இன்று காலை 11.00 மணி தொடக்கம் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

லண்டன், ரியாத், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமானச் சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்திலுள்ள கவலாளிகள் தம்மையும் தாம் கொண்டு செல்லும் பைகளையும் தொடர்ந்து சோதனை செய்வதனால் தமது பணிக்கு இடையூறு விளைவதாக கூறியே குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.