சிவலிங்கம் சிவகுமாரன்
பணியிடங்களில் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்து அதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின்  C190   என்ற சமவாயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும் இன்னும் அது சட்டமாக்கப்படாமலுள்ளது

கொரோனா தொற்று காலத்தில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கின. இதன் போது குறைந்தளவு மனித வளங்களைக் கொண்டு பல நிறுவனங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வேறு வடிவத்தில் ஆபத்துக்கள் காத்திருந்தன. குறைவானவர்களே வருகை தருவதால் சில பெண்கள்  ஆண் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளினால் பாலியல் சேட்டைகளையும் சீண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.  

இவ்வாறான பல சம்பவங்கள் பல பாடசாலை ஆசிரியைகளுக்கும் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இச்சந்தர்ப்பத்திலேயே சில அரச சார்பற்ற அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைத்துள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின்  C190 என்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம், சட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.     

 C190 தீர்மானம் என்றால் என்ன? பணியிடங்களில் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லதொழித்து அதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச தர நிலையாக இது உலக நாடுகளால் நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே இது குறித்த கருத்தாடல்கள் அதிகரித்திருந்த காரணத்தினால்  தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அது குறித்த ஒரு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். அதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. எனினும் இதை பாராளுமன்ற சட்டமாக்குவதற்கு தாமதங்கள் எழுந்துள்ள காரணங்களினால் தொழிற்சங்க அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் வேறு ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும்  இவ்விடத்தில் முன்வைத்துள்ளன.

பெண் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் தொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுவினரின் முறையான விவாதங்களுக்குப்பிறகே இது சட்டமூலமாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அடுத்த வருட மகளிர் தினத்தில் இந்த C190 தீர்மானமானது. யதார்த்தபூர்வமானதொன்றாக இலங்கையில் விளங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஒரு தீர்மானத்தை பொதுவானதொரு சட்டமாக கொண்டு வந்து மாற்றிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை விளங்கும் என்பது முக்கிய விடயம்.

இப்படியானதொரு சூழல்களுக்கு மத்தியிலேயே கடந்த வாரம் இந்த தீர்மானத்தின் அவசியத்தை வலியுறுத்திய ஒரு சம்பவம் இடம்பெற்றது.இலங்கையின் ஊடக நிறுவனங்களின் செய்தி அறைகளில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அமைப்பு ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது.

மேற்படி முறைப்பாடுகள்  குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பெண் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றும் சூழலை உறுதி செய்யுமாறும் அந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து Me too பாணியில் பல வெளிநாட்டு உள்நாட்டு ஊடகவியலாளர்கள் தாம் பணியாற்றும் சூழலில் எதிர்கொண்ட பாலியல் சவால்களை பட்டியலிட ஆரம்பித்தனர். சமூக ஊடகங்களில் இந்த விடயம் பூதாகரமாக உருவெடுத்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.