முழு உலகையுமே கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், பின்பற்றப்பட்டுர் வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்திலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுகாதார விதிமுறைகள் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்க், தனது இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதையடுத்து மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்ததமாக இந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலிற்கமைய சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM