கருங்கல் குவாரியால் ஆபத்து; கிராம மக்கள் குற்றச்சாட்டு

By T. Saranya

26 Jun, 2021 | 08:54 PM
image

வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஜேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமமக்கள்,

குறித்த  மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதுடன். எந்தவித அறிவித்தலும் இன்றி  வெடிவைத்து கற்களை உடைக்கும் போது அங்கிருந்து சிதறிவரும் கருங்கல் துண்டுகள் அருகில் உள்ள குளத்திலும், வீடுகளிலும் விழுகின்றது.

கடந்த இரு தினங்களிற்கும் முன்பாகவும் அதிகளவான கற்கள் வந்து விழுந்தமையால் குளத்து பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியிருந்தனர்.  அத்துடன் அருகில் அமைந்துள்ள விவசாய காணிகளிலும் கற்கள் விழுந்து தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் போதுகூட அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிற்கும் குறித்த கற்குவாறியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த கல்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திவிட்டு கல் உடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும் என்றனர்.  

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த வருடங்களில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44