(செ.தேன்மொழி)
தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் முஸ்லீம் மக்களும் அதனூடாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இலங்கையர் என்ற வகையில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.
சர்வதேச சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டதுடன், அதனை முன்னிட்டு வெலிக்கடை - சிறைச்சாலைகள் தலைமையகத்தின் முன்னால் அடையாள போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடையாள போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சர்வதேச சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள போராட்டத்தை வரவேற்கின்றேன்.
இந்நிலையில் பல வருடகாலமாக சிறைச்சாலைகளில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கமைய அரச காலத்தில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொறுத்தமாக இருக்குமா? என்பது தொடர்பில் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் மகிழ்ச்சி அடைந்தாலும் , அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறே நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்நிலையில் எஞ்சிய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல் கைதிகள் என்போர் தனிப்பட்ட தேவைக்காக எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் திட்டமிட்டு செய்தவர்கள் அல்ல. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்துவிட்டு, அதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மரண தண்டனை கைதியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில், பொது மன்னிப்பு பெற்றுக் கொள்வதற்கும் தனவந்தர்களாக இருக்க வேண்டுமா? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் அண்ணளவாக 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதன்போது பெருந்தொகையான தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏப்ரல் 21 குண்டு தாக்குதல்களின் பின்னர் இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி சிங்களவர்களை கைது செய்யவும் வாய்ப்புள்து. அதனால் இலங்கையர்கள் என்ற வகையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததன் பின்னர் சிறைவைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோர் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், இலங்கை ஜனநாயக கொள்கையை பின்பற்றும் நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு மாறாக ஜனநாயக கொள்கைகளை பின்பற்றாத நாடுகளுடன் நட்புறவை பேணிவருகின்றது. அதன்காரணமாகவே இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM