கொரோனா தொற்றுப்பரவலால், தாய், தந்தை, மகன் மூவரும் மரணித்த சம்பவம் ஒன்று பேராதனை முருத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பேராதனை பொது சுகதார அதிகாரி இது பற்றித் தெரிவிக்கையில், பேராதனை முருத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகளான சிரிபால ராஜபக்ச (72) என்பவர் கடந்த 3ம் திகதியும்,  சீலா ராஜபக்ச (70) என்பவர் 14ம் திகதியும்,  அவர்களது புதல்வன் தம்மிக்க ராஜபக்ச (38) கடந்த 23ம் திகதியும்  மரணித்துள்ளனர். இவர்கள் மூவரும் கொவிட்-19 தொற்று காரணமாகவே மரணித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதில் தம்மிக்க ராஜபக்ச என்பவரது சடலம் கண்டி மஹய்யாவயில் உள்ள பொது மயானத்தில் கடந்த 24ம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

குறித்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.