(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினால் எரிபொருள் விலை குறைவடையும் என்று அமைச்சர்கள் சிலர் கூறினர். தற்போது பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் எப்போது எரிபொருள் விலையை குறைக்கப் போகிறீர்கள் என்று கேள்வியெழுப்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக போராடிய தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இன்னும் அதேபோன்று மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே அரசாங்கம் அவர்களுக்கான துரித நிவாரணத்தை வழங்க வேண்டும்.
ஆகவே பசில் ராஜபக்ஷ வந்துவிட்டார் எனக் கூறி அவரது கைகளில் பந்தை மாற்றிவிட்டு ஏனையோர் தப்பிக்க முயலக்கூடாது.
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஊடகங்கள் முன்னால் முதலைக்கண்ணீர் வடிப்பதை தவிர்த்து தலைமைத்துவத்திடம் நேரடியாக சென்று பேசி மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். எரிபொருள் விலை குறைவடைந்தால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடுவோம் என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM