இலங்கையின் உள்ளக விசாரணை மற்றும் உள்ளக நீதித்துறையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளார். அத்துடன் சர்வதேச சமூகமும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை வைத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். 

உள்ளக நீதிபதிகளை  சர்வதேசம்  நம்புகின்றது. அதனால் தான் தற்போது  சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குமாறு அரசாங்கத்துக்கு யாரும் அழுத்தம் பிரயோகிப்பதில்லை. விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை குறித்து மதிப்பிடவே பான் கீ மூன் இலங்கை வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.