(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 200 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய , போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விருந்துபசாரங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 200 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 04.00 மணியுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாட்டுடனும் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதுடன், அது தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவலுக்கமைய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, இது போன்ற நபர்கள் தொடர்பிலும் , போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பிலும் , 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM