தலைமன்னார் - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள பேசாலை மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் பேசாலை இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த செபமாலை தோமாஸ் குஷரூஸ் (வயது 54) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை (11.12.2015) மதுபானசாலைக்கு மது அருந்தவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றவறே மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனலிக்காததால் நேற்று மரணத்தை தழுவிக் கொண்டார்.

இவர் உடனடியாக பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் மன்னார் பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார்.

இவரின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற காரணத்தினால் கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் மன்னார் பொது வைத்தியசாலையில் உணர்வற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், மோட்டர் சைக்கிளில் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தலைமன்னார் பொலிஸில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இவர் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.